Monday, May 10, 2010

காதலிக்கக் கற்று கொள் !


இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

காதல் வடை


காதலி என்பவள்
பாட்டி சுட்ட வடை மாதிரி
ஒழுங்கா watch பண்ணலைனா
நரிபயல் pickup பண்ணிடுவான்

நிஐமான காதல்

காதலிக்கத் தெரிந்த
உனக்கு
காதலைச் சொல்ல
துணிவில்லை..................
கண்களால் பார்க்கத் தெரிந்த
உனக்கு
பேசுவதற்கு வார்த்தைகள்
தெரியவில்லை.......................
மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதின் விருப்பத்தை
அறிய முடியவில்லை...........
அதனால் தான்
கேட்கின்றேன்
நீ என்னைக் காதலித்தது
நிஐம் தானா???
நிஐமென நம்பி வாழ்ந்த
நான் இன்று
உன் நிழலைத் தேடி
அலைகிறேன்...........
ஏனெனில்
நான் உன் மேல்
கொண்டது
நிஐமான காதல்!!!!

பிரிய மாட்டேன் என்னை மறந்து நான்...!


மண் மகள் கை நீட்டி வாவென்று
வான் மழையை அழைக்கின்றாள்

வந்த பால் மழையை எனக்கே எனக்கென்று
மார்போடு அணைக்கின்றாள்.....

அது போல என் தேவதையுன்னை கை நீட்டி
அழைக்கின்றேன்

சத்தியமாக உன் அனுமதியில்லாமல்
உன்னை அணைக்கமாட்டேன்...!

என் கண்ணீர் கடலாவது உன்
புறக்கணிப்பில்....
என் கண்ணீர் வைர கல்லாவது உன்
புன்சிரிப்பில்...

என் உள்ளம் என்ற உவர் நிலத்தை
ஊற வை உன் அன்பினால். ..

பின்பு உன்னை எக்காலமும்
பிரிய மாட்டேன்
என்னை மறந்து நான்...!

காண வந்த நிலவே


காண வந்த நிலவே
இரவில் வந்த உறவே ..
என்னை காண வந்த நிலவே...
என்னைக் கண்ட பின்னும்

இன்னும் தொலைவில் இருப்பது ஏன்..

நான் வாழ்வது உன் வெளிச்சத்தில் தான்..
நானும் தேய்கின்றேன் உன்னைப் போல் ...
என்றும் உன் நினைவுகள் தொடர்வதால் ...

இளமையோடு ஒரு பழைய காதல்

இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் கிழட்டுக் காதல்;


தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...


அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைதில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.


புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!


இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன


இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


நீ பற்றியிருந்த என் கரங்களில்
தொற்றியிருக்கும்
என் பேரனின் குரல்
இழுத்தெடுக்கிறது என்னை
மீண்டும் நிகழ்காலத்துக்கு
"தாத்தா நேரமாகிவிட்டது
பாட்டி தேடுவாங்க"


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

ஆசை படுகிறேன்

கற்றே உன்னை நான் சுவாசிக்க ஆசை படுகிறேன் ,

அதற்கு நீ அனுமதி தருவய ?
ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி காத்து கொண்டு ரிக்கிரேன் ,
நீ சுவாசித்த காற்றை யவுது நான் சுவாசிக்கலாம் என்று ,
எந்நாளும் உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன் ,
ஒரு முறை யாவது நீ சுவாசித்த காற்றை ,
சுவாசிக்கலாம் என்று .

என் தேவதையே


தேவதைகள் கடவுளின் தூதுவர்கலாமே...!
நான் நம்பமாட்டேன்...
தேவதையே
உனக்குதான் எல்லா கடவுள்களும் தூதுவர்கள்..!

பிடிக்காத காதலி

என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலியை பிறந்து
விட்டேன்

அடுத்த ஜென்மத்திலாவது நீ
விரும்பும் பெண்ணாக பிறக்க
வேண்டும் நான்!

முகவரி

யாரேனும்
என்ன
முகவரியை
கேட்டால்
என் காதலியை காட்டுங்கள்
அவளுக்குத்தான்
தெரியும்
என்ன
கல்லறைஇன
முகவரி....

கவிதை 4



கவிதை 3





கவிதை 2










கவிதை 1





1


































































Sunday, May 9, 2010

சித்தனும் பித்தனும் இயற்கை!

பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை

பணம்

பெட்டியில்

பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

பாதச்சுவடு

புள்ளிகள்
இல்லாத கோலம்
அவள்
"பாதச்சுவடு"

ஒற்றை ரோஜா

தரை தொடாத
விழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா

காதலர்கள்!


இரு மீன்கள்
மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்!

கருடன் சொன்னது

அந்த வெள்ளைக்காரன் மதிக்கத்தக்க தோற்றத்துடன் தான் இருந்தான். ஏன் போலீஸ் கூட்டிப் போனார்கள் எனப் புரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டதில் தெரிய வந்தது. பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டானாம். இரத்தமும் சதையுமான ஒரு மனிதன்
ஒரு முப்பது பக்கப் புத்தகமில்லாமல் செல்லுபடி ஆவதில்லை.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.

காடு மலை எல்லாம் தேடிட்டேன்"

"காடு மலை எல்லாம் தேடிட்டேன், ஒரு தங்கமான டீ ருசிக்காக" என்ற வசனம் எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்குன்னு தெரியலை. ஒவ்வொரு இண்டர்நெட் கனெக்ஷனாக மாறி இன்று வரையில் எதிலுமே நிம்மதி இல்லாத எனக்கு அடிக்கடி அந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

நான் இருப்பது ஹைதராபாத். இது வரை முயற்சி செய்து மண்ணைக் கவ்விய திருப்தியடையாதவை இவை:

  • சிஃபி. 256kbps தான் அதிகபட்ச வேகம். யூடியூப் வீடியோவெல்லாம் பார்ப்பதற்கு சாமியார் அளவுக்குப் பொறுமையும் நேரமும் வேண்டும்.
  • பி.எஸ்.என்.எல். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், நல்லாத் தான் இருக்கும். திடீர் திடீர்னு ஒரு அஞ்சு நிமிஷம் சம்பந்தமே இல்லாம கனெக்ஷன் கட் ஆகுறதை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.
  • டாடா நொண்டிகாம். சீ, இண்டிகாம். ஊர்ல யாரும் இண்டர்நெட் யூஸ் பண்ணலேன்னா உங்களுக்கு நல்லா இருக்கும். என்னது, சாயங்காலம் ஏழு மணிக்கு இண்டர்நெட் யூஸ் பண்ணுவீங்களா? அடப்போங்க சார். ஒரு பத்தரை மணிக்கு மேல ட்ரை பண்ணிப் பாக்குறது!
  • ரிலையன்ஸ் நெட்கனெக்ட்+. இன்னைக்குத்தான் வேலை பாக்க ஆரம்பிச்சிருக்கு. 3Mbps-ல வேலை பாக்குறதைப் பாத்து கண்ணீர் மல்க VPN-ல கனெக்ட் பண்ணி வேலை பாக்க ஆரம்பிச்ச அடுத்த நிமிஷமே High Speed 1x-னு மாறி 140kbps-க்கு மாறிக்கும்.
இவ்வளவு அனுபவம் இருக்கிறதால நானும் சொல்லலாம். "காடு மலை எல்லாம் தேடிட்டேன்!"

நீர்ச்சறுக்கு

காற்றடைத்த பையில் ஏறி அமர்ந்தேன்.
தயாராவதற்குள் வழுக்கி இறங்கியது.

சுற்றிலும் மூடிய சறுக்கல்.
ஒரே கும்மிருட்டு.
கடந்த பின்பே உணர்ந்துகொண்ட திருப்பங்கள்.
நிர்ணயிக்கப்பட்ட பாதையில்
படுவேகமாய்ப் பயணமானேன்.

ஏதோ வெளிச்சம் போல் தெரிந்தது.
கண்கொண்டு காணுமுன்
தொப்பென்று விழுந்தேன்.

என்னைச் சுமந்த பை நீரில் மிதந்தது.
மென்தென்றல் வீசியது.
பரந்த ஆகாயம் வெறித்துப் பார்த்தது.

தணியாத வேட்கை உந்தித்தள்ள
வேறொரு பையுடன் கிளம்பினேன்.
மீண்டும் ஒரு முறை!

சக பயணி்

ஒரே விமானம்தான் என்றாலும்
அவரவர்க்கு அவரவர் இருக்கை.

சிலருடைய ஜன்னலில்
விமானத்தின் இறக்கைகள்
தெரியும்.

சிலரது ஜன்னலில்
தெரிவதில்லை.

சிலர் ஒன்றுக்குப் போனால் கூட
இரண்டு பேர் எழுந்து வழிவிட வேண்டும்.

சிலரால் தூங்க முடிகிறது.
சிலர் புத்தகங்களில் மூழ்கிப் போகிறார்.
சிலர் படம் பார்க்கிறார்.

ஒரே விமானத்துக்குள்
ஓராயிரம் தனிப்பட்ட பயணங்கள்.

ஒரே கட்டிலில் தூங்கியபோதும்
இருவருக்கும் வேறு வேறு கனவு.
வேறு வேறு வாழ்க்கை.

சுதர்மம்

உனக்கு வருவதை நீ செய்.
இறைத்தோறும் ஊறும் கிணறு.
இறைத்தோறும் காலியாகும் குடம்.

வாழ்த்து












அழகால் ஆபத்து


அழகாக
இருக்கின்ற
மயில்களின்
இறகுகளைத்தான்
பிடுங்குகிறார்கள்...
அண்டங்
காக்கைகளின்
இறகுகளை அல்ல!

அழகாக
இருக்கின்ற
ரோஜா
பூக்களைத்தான்
பறிக்கிறார்கள்...
எருக்கம்
பூக்களை அல்ல!

இறுதி ஆசை...

அவள் சூடி வீசியெறிந்த
வாடிய பூக்களை
சேகரித்து வைத்திருக்கிறேன்,
என் இறுதி ஊர்வலத்தில்
அதை மட்டும்
என் மீது வீசுங்கள்...

அவள் காலடிச் சுவடுபட்ட
மண்ணை சேகரித்து
வைத்திருக்கிறேன்,
அதனால் மட்டுமே
என் கல்லறைச்
சுவரை எழுப்புங்கள்...

அவள் விழிகளில்
தொடங்கிய என் காதல்,
அவள் பாதங்களிலேயே
முடியட்டும்.

என் நண்பிக்கு அஞ்சலி

உன் அகன்ற விழி நீரின் வழி என் கை பிடித்து நீ
பகன்ற மொழிபெயர்துணர முனைகின்றேன்.
என்னை பிரியும் செய்தி சொன்னாயா?
என்னிடமிருந்து விடுபட நினைத்த பொழுது
எனக்குள் நானே வேட்கும் பொழுது
உனக்கும் என் அன்பு கனத்ததா?
கண்ணீர் கழுவி களைந்து விட்டாய்.

வெட்டிஎன் நகத்தை பெட்டிக்குள் பதுக்கிய உன் நிழலை
சட்டத்தில் பிடித்து வைத்தேன் ஜாதி மல்லி பூ சொரிய.
நாம் அப்போது இணைந்தமர்ந்த தனிமைகள் இப்போதோருமைக்கழகி போயின.
தற்போது என் தனிமைகள் அடர்ந்து வெருமைக்கழகி போகுது.
கூட்டத்தில் என்னை கண்டால் கொதித்துருளும் உன் விழிகள்,
என்னை கூடுகையில் நெஞ்சு குளிர் திராட்சையை குணம் மாற கண்டிருக்கேன்.
அந்த சுகம் அப்படியே நிலைக்க நினைக்க, நான் எப்படியோ ஆகிப்போனேன்.
என் கிறுக்கலை கூட கவிதையாய் திரித்தெடுத்து காண்பவருக்கெல்லாம் காட்டி மகிழ்வாய்.

இப்போது என் எழுத்துகள் கூட என்னை ஏளனம் செய்கின்றன,
வார கவிதை பெயரில் எங்களை வதைக்கிறாய் நீயென.

நீ இட்ட சட்டம் 144 தனக்கு தானே இயங்குகிறது.
சிற்றம் கொள்ள யாரும் இல்லை, என்னுடன் சிறிதளவும் யாருமில்லை.
சண்டைக்கும் யாருமில்லை, அதனால் சமாதானத்துக்கு வேலை இல்லை.
எனக்குள் நானே இவை செய்து தோற்ற படியே வெற்றி காண்கிறேன்.

நீ இட்ட முத்தத்தின் எச்சில் என்றும் காயாதிருக்க
ஈர விழி ரேகை ஒன்றை முகத்தினுள் ஓட விட்டேன்.

நீ என்னை நினைப்பாயா? நீயேனும் என்னை நினைப்பாயா?
என்னை நினைக்கும் நேரம் உனக்கு எங்கிருக்கும்?
நொடிக்கு 100 உட்பிரவேசம். யார் வரவை நீ பார்ப்பாய்? என் வரவை எதிர் நோக்கு.
ஆண்டுகள் 18 அனுபவம் பெற்ற நீ
சித்ரகுப்தனின் நாட்குறிப்பில் என் நாள் என்று என்று பார்த்து சொல்லேன்.
பின்னிருந்தால் முன்னேற்ற முயற்சி செய்யேன்.
தனிமை மிகவும் கனக்கிறது.
உன்னருகில் நான் என்னருகில் நீயென,
மீண்டும் ஒரு வசந்த விழா அனுபவிக்க ஆகுமட்டும் முயற்சி செய்யேன்,
அடுத்தடுத்து உறைந்திருப்போம்.

விபச்சாரியின் முந்தானை வாசம்

விரிச்சி விரிச்சி மடிச்ச பாய்க்கு
ஒரு படி சோறு மிச்சம்; எங்க
வாசம் வீசும் முந்தானைக்கு - அவிசாரின்னு
பட்டம் மிச்சம்!

கயிறு கட்டி புடவை கட்டி
உடம்பெல்லாம் வாசம் வீச;

விரிச்ச பாயி அத்தனையும் - என்
புள்ளை குடும்பம் தின்ன சோறு!

கூவி கூவி வித்ததில்லை
உடம்பு விலை பத்துரூபா; இங்கு
மாறி மாறி வந்தவனுங்க - மானம்
ரோஷம் எத்தனை ரூபா?!

உடம்பு காசு தொழிலா - இது
உடம்பு சுகம் - போதைப் பித்து;
நோய் வரும் - உயிரு போகும்
வேஷம் போட்ட வாழ்க்கை இல்லையே!

மேஞ்சி உடல் தின்னதால -
காமம் காமம் வாசம் தானே; நாங்க
விட்ட ஏப்பம் அத்தனையும் -
பலரு குடும்பம் கெடுத்த கதைங்க தானே?!

காலம் காலமா வந்த சனங்க -
கணக்குல வேணாம் விட்டுத் தள்ளு;
காலு தட்டு விழுந்த பொழப்பா -
கணக்குதுங்க எங்க வாழ்க்கை!

இரத்தம் சுண்டி நிக்கையில - உடம்பு
வெடிச்சி சாகையில - நாயி கூட
மோன்டு போகுமோ (?) இவ
வேசி தானேன்னு உமிழ்ந்து கூறுமோ?!

நாண்டுகிட்டு சாகலாம்னு - குடும்ப பாரம்
கணக்கையில; விதி
உடம்பெதுக்கு விற்கதான்னா -
இந்த சிறுக்கி புள்ள என்ன செய்ய?!

பல நாளு தயங்கி தயங்கி
விட்ட பயணம் எத்தனையோ;
இதோ.... அடுத்த ஆளு கதவைத் தட்டுதே
திறக்கவா... வேண்டாமா?

சரி... சரி;
மனசே மனசே கொள்ளாத.....
இன்னைக்கு மட்டும் வெச்சிகிட்டு -
நாளைலருந்து நிறுத்திக்கவா? !!

ஏன் அம்மா மறந்து போனாய்...?

தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்.
இயந்திரமாய் பல்துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
கல்லாய்ப்போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்,
கம்ப்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டுவிட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில்...
பார்த்துப் பார்த்து
கல்வி தந்தாய்.
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா?

நீ...

நீ
பிறந்த போதுதான்
பிறந்தது
எனக்கான வாழ்வும்!

நீ
ஆழக்கடல் போல்
அமைதியாய்
இருந்து கொண்டு
என்னை
ஓரக்கடல் போல்
ஓலமிடச் செய்கிறாய்!

நீ
எங்கிருக்கிறாய் என்பது
எனக்குத் தெரியாது...
என் காதலுக்குத் தெரியும்!

நீ
என்
அருகிலிருந்த போதெல்லாம்
அறிய முடியாத காதலை
ஒருநாள் விலகியிருந்தபோது
உணர்ந்து கொண்டேன்!
நான் முகமது கஜினி
பதினேழு முறையல்ல...
பதினேழாயிரம் முறை கூட
படையெடுப்பேன்!
எனக்கு வேண்டியது
உனக்குள் இருக்கும் காதல்!

மதம்


மனிதன் -
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!

கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!

மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!

இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!

காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!

வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!

மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!

நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!

மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!

துணிவே துணை


கலங்கி நின்றால்
கண்ணில் விழும்
தூசி கூட துயரம்!
துணிந்து விடு
தூணே விழுந்தாலும் தூசி!

அடடே

பிறருக்கு
உணவாகப் போவதை
நினைத்து,
எத்தனை மீன்கள்
அழுதனவோ?
கடல்நீரில் உப்பு!

லெப்ட்ல கட் பண்ணு; ரைட்ல கட் பண்ணு!

வாட்சும்
பஸ்சும்
காரும்
ட்ரெயினும்
லைட்டும்
சுச்சும்
தமிழென்று நினைத்தே
நிறைய தமிழன் -
செத்துவிட்டான்

தேங்க்சும் சாரியும்
"பட்" டும் "சோ" வும்
எஸ்கூஸ்மியும்
தமிழாகிவிடுமென்றே
நிறைய தமிழன் வெய்ட் பண்றான்;

லெப்டும் ரைட்டும்
கட் பண்ணியும்
வாழ்க்கையில் அவுட் ஆகாத
தமிழன் -
தமிழை சூட் பண்ணியும்
வெற்றிய மீட் பண்றது தான்
கேட்க கேவலமா இருக்கு;

ரைட்டோ தப்போ
வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு
எந்த கார்னர்ல முட்டிக்கினாலும்
எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு
சொல்லிக்கிற தமிழனின்
ஆங்கில டம்பத்தில் - தான்
வீழ்கிறது தமிழ்!

சார் என்று
சொல்லும் தமிழனுக்கு
ஐயா என்று சொல்வதிலும்
பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி
பார்ட்டி வைக்குற தமிழனுக்கு
பார்ட்டியை விழா என்று
உச்சரிக்கவும் எந்த மானம்
கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை!

ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி
அறியாமையால் ஆங்கிலம் கலந்து
அறுபட்டு வாழும் தமிழ் -
நம் வாழ்வின் அடையாளத்தையும்
நம் யதார்த்தங்களையும் நாளை -
மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில்
யாரால் திருத்தி விட முடியும்?

வேறொன்றும் வேண்டாம்,
வாயில் ஒரு சொட்டு
விஷம் வீழுமெனில்
எத்தனை வேகத்தில் அதை
காரி உமிழ்வோமோ -
அப்படி உமிழ்ந்து விடுவோம் -
இடையே கலந்த ஆங்கிலத்தை
தமிழ் (த்)தானே மிஞ்சும்

கண்டு கொண்டேன்

கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

தொ(ல்)லைகாட்சிப்பெட்டி

பணக்காரர்களிடம் மட்டும்
இருந்தது அன்று.
ஏழைகளிடம் குடிசையிலும்
இருக்கின்றது இன்று
நடுத்தர குடும்பத்திலோ
சொந்தமாக வாங்கியது ஒன்று
அரசாங்கம் தந்தது ஒன்று
பிரித்துக் கொண்டனர்.
பெரியவர்கள் பார்க்க ஒன்று
சிறியவர்கள் பார்க்க ஒன்று
வக்கிரம் வளர்க்கும் தொடருக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
பாலுணர்வை ஊட்டும் பாடலுக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
கேலி பேசும் நகைச்சுவைக்கு
அடிமையானது ஒரு கூட்டம்..
வன்முறை போதிக்கும் திரைப்படத்திற்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
அடிமைகள் பலவிதம்.
சிந்திக்க, செயல்பட, படிக்க, எழுத
மறந்து சோம்பேறிகள் பெருகினர்.
பரிசுப்போட்டி அறிவித்து விட்டார்கள்.
பாவம் இனி தமிழன்
இமைக்க மறந்து
தொடர்கள்பார்ப்பான்

உழைப்பின் உயர்வு!


தாஜ்மஹாலைக் காணுகையில்
சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!
உழைப்பாளியே உனது
உன்னதமான உழைப்புத்தான்!
கோவில்களைக் காணுகையில்
கடவுளர் தெரிவதில்லை.......
சிற்பிகளின் உழைப்புத்தான்
சிந்தையில் உதிக்கிறது!
சோறு நான் உண்கையிலே
சம்சாரத்தை நினைப்பதில்லை....
விவசாயியே உந்தன்
வியர்வைதான் நினைவுக்கு வருகிறது!
ஆடை அணிந்திருக்கும்
ஆள் எனக்குத் தெரிவதில்லை....
நெசவாளியே நீதான்
தெரிகிறாய் என் சிந்தைக்கு!
ஒவ்வொன்றிலும் தெரிவது
உழைப்பின் உயர்வே!

காலம் என்ற ஓட்டை பானை...


முதல் தேதிகளில்
கவலைகளை
மறக்க எண்ணி...!

ரயிலோ
பஸ்ஸோ
நெரிசல்களில் சிக்கி
வேலைக்கும் வீட்டுமாய்
தினசரி அல்லல்கள்..

மாதம் பிறந்துவிட்டது
பாலுக்கும் அரிசிக்கும்
பாக்கி போக
மிச்சப்பட்டிருப்பது
விரல்கள் மட்டுமே

தினசரி
விடிகிறது பொழுது
கழிகிறது நிமிஷம்
காலம் என்ற ஓட்டை பானையில்
உயிர் சிந்தி
உழைப்பை கொட்டி
தொலைந்து போகிறது வாழ்க்கை!

புதுக் கவிதை

முரண்!

தேங்காய்
உடைக்கிறார்கள்
வாழ்க்கை
சிதறிப் போகமலிருக்க!
தேங்காய்
பொறுக்குகிறார்கள்...
வாழ்க்கையில்
சிதறிப் போனவர்கள்!

மறுபக்கம்...

எனதன்பின்
மிக மெல்லிய
விரல்களை
ஒடித்துச் சிதைத்து,
உன் நாவின்
சுவைக்கென
உருமாற்றுகிறாய்.

வக்கிரங்கள்
நிமித்தம்
வழிந்தோடும்
என் ரத்தங்கள் குறித்து,
உனக்கு வருத்தமேதுமில்லை.

குழந்தைப் பேறுக்கு பின்
தாய் என்பதனை
சதா எனக்குணர்த்தும்
உன்னால்
நீ தந்தை
என்பது மட்டும்,
ஏனோ
மறந்து போகிறது.

என்
ஆடை அலமாரியில்
எப்போதும்
ஒளிந்து கொண்டிருக்கும்
உன்
சந்தேகங்களின்
கண்களுக்கு
ஏனோ
தெரிவதில்லை
ஒரு போதும்
உன்
நிர்வாணம் பற்றி...

பூ

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூபெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ!மரண சாலையில் -சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூதிருப்பதியோ திருத்தணியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ!தெருக்களில் கூவி கூவி விற்றவளின்வயிற்றுப் பசிக்கு - உணவு தரும் பூபூ பூவென கத்தியவளின் -நிறைய நாள் பசியில் - முட்கள் பதித்த பூ!முழம் வாங்கி முடிந்து கொண்டதில் ஏழையின் வீட்டிலும் மணக்கும் பூஅழகும் மணமும் மிஞ்சிய செருக்கால் முட்களை தாண்டியும் பறிக்கப்படும் பூ!பூத்த இடத்தின் அடையாளம் தொலைத்து வைத்த இடத்தில் அதிகாரம் செய்யும் பூகாய் கனி மரமென தழைத்த - விதையின்முதல் நிர்வாணம் - பூ!


கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

மரணப்பார்வை..!

ஏய் மரணமே!
நீ என்னை
தீண்டும் முன்
தாண்டிவிடுவேன் என்
வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை!
இருப்பினும்
உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள்
அனைவரையும் நீ
ஒன்றாய் கருதுவதால்...

ஏக்கம்!

கழனிகளில்
மாடி வீடுகள்...
ஏக்கத்துடன் பறவைகள்...
எப்படி இனி
உணவு கிடைக்கும்
இந்த மனிதர்களுக்கு?


விதவை

இதழ் இழந்த
மலராய் - மலர்
இழந்த மங்கை நான்.....

துக்கத்தை உணர்த்துவது
கறுப்பெனில் - வாழ்க்கையை
தொலைத்ததன் அடையாளம்
வெள்ளையா.....

தேடினேன் விடியலை
இருளில் - ஏற்ற விரும்பிய
விளக்கை அணைத்து அணைக்கவே
ஆர்வம் கொண்டனர் அனைவரும்.....

வேண்டாத ஆறுதலை,
ஆதரவை தருவதாய் - வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சினர்
வீட்டினர் கூட.....

மேகம்போல் வந்து
மேகமாய் மறைந்த மணாளன்
மின்னலாய் வந்து உயிர்
எடுத்தவன் எமன்.....
வானவில்லின் ஆயுளைப்போல்
வாழ்க்கையின் வசந்தங்கள்
மழை நின்ற வானமாய்
என் வாழ்க்கை.....


குழி

அவள்
என்னைப் பார்த்துச்
சிரித்தாள்
கன்னத்தில் குழி
விழுந்தது
நான் அவளைப் பார்த்துச்
சிரித்தேன்
வாழ்க்கையே
குழியில் விழுந்தது.